Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி பெற்றே அழைத்து சென்றோம் - சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (17:21 IST)
தேனி குரங்கணி மலை ஏறும் போது வனத்துறையினரிடம் அனுமதி பெற்று எங்கள் உறுப்பினர்கள் டிரெக்கிங் சென்றனர் என சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது.

 
சென்னை மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களிலிருந்து, தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை ட்ரெக்கிங் சென்ற 39 பேர் காட்டுத்தீயில் சிக்கியதில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர். அந்நிலையில், அவர்களை அனைவரும் அனுமதி இல்லாமல் சென்றதால்தான், இந்த கோர சம்பவம் நடந்தது எனவும், முறையான அனுமதி பெற்றிருந்தால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சென்னையிலிருந்து குரங்கணிக்கு சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற நிறுவனமே 27 பேரை அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. மற்ற 12 பேரும் ஈரோட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனவுடன் சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனம் மூடப்பட்டது. அங்கு ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் திரும்பி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
இந்நிலையில், சென்னை டிரெக்கிங் கிளப் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் இந்த கோர சம்பவம் பற்றி இன்று விளக்கம் அளித்துள்ளது: அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
இந்த தீ விபத்தில் மரணமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். அனுபவம் வாய்ந்த எங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நிஷா மற்றும் திவ்யா மற்றும் அருண், விபின் ஆகியோரே 27 பேரையும் 2 நாட்கள் ட்ரெக்கிங் அழைத்து சென்றனர். அவர்களோடு தேனியை சேர்ந்த வழிகாட்டியும் உடன் சென்றார். சனிக்கிழமை காலை அவர்கள் குரங்கணி மலைப்பகுதியின் அடிவாரத்திலிருந்து அவர்கள் டிரெக்கிங் துவங்கினர். அப்போது, வனத்துறை சோதனை சாவடியில் முறையான அனுமதி பெற்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் கொல்லுகுமலை நோக்கி சென்றனர். சனிக்கிழமை மாலை அவர்கள் கொல்லுகுமலை தேயிலை தோட்டத்திற்கு வந்தனர். 
 
அன்று இரவு அங்கு தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் அங்கிருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போதுதான் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியதில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதில் சிலர் எங்களை தொடர்பு கொண்ட அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தகவல் கொடுத்தனர். உடனடியாக நாங்கள் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். ஆனாலும், சிலர் இறந்துவிட்டனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
 
நாங்கள் சிறந்த ஊழியர்களையும், உறுப்பினர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் இழந்துவிட்டோம். பெண்கள் துணிவாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கிளப்பின் நோக்கம். ஆகவேதான், பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் இதுபோன்ற டிரெக்கிங் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கிறோம். இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்கள் ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments