சுஜித்தை சரியான முறையில் ஏன் மீட்கவில்லை? என்று கேள்வி எழுப்பி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயரமான செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தும் நபரை கீழே கொண்டு வர போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர்.
சுஜித்தை மீட்க மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த மீட்புப்படையினர் முழு அளவில் ஈடுபட்ட போதிலும் மீட்புப்பணி தோல்வி அடைந்தது என்பது உண்மைதான். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை மீட்கும் அளவுக்கு இன்னும் இயந்திரங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தையின் உயிரை காப்பாற்ற தேசிய மீட்புப்படையினர் முடிந்தளவு முயற்சி செய்தனர்.
துணை முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தீபாவளியை கூட கொண்டாடாமல், இரவு பகலாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எனவே அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக மீட்புப்பணியை குறை சொல்வதுபோல் விளம்பரத்திற்காக இதுபோன்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது