இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் சாதனை படைத்த வீரர்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு, விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தன.
அதன்படி, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத் கமல் தேர்வாகியுள்ளார்.
அதேபோல், அர்ஜூனா விருதுகு சிமா புனிமாவும்( தடகளம்)பக்தி பிரதீப் குல்கர்னி விருதுக்கு பிரக்யானந்தாவும்( செஸ்). அஷ்னி விருதுக்கு சரிதா (மல்யுத்தம்) உள்ளிட்ட பல வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத் கமல் தேர்வாகியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,
#B2022-இல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த @sharathkamal1 அவர்கள் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் #KhelRatna விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.