Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுப்பிரியர்களின் குழந்தைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயர் - மதுக்குடிப்போர் மாநிலத்தலைவர்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (21:04 IST)
.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5709 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 349,654 ஆக உயர்ந்துள்ளது .

இந்நிலையில், கொரொனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் மக்களுக்காக சேவையாற்றிவரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ளது., அத்துடன் அவரது மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து,அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் சென்னையில்  144 நாட்களுக்குப் பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன், தமிழகத்தில் 61.4 % மதுப்பிரியர்கள் உள்ளனர்.  சுமார் 85 பெண்கள் உள்ளனர்.

மதுப்பிரியர்கள் முகக்கவசம் அணிந்து பாதுக்காப்புடன் தான் முகக்கவசம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுப்பிரியர்களுக்குப் புத்துணர்வு முகாம்  போல் இந்த 144 நாட்கள் இருந்தது.

இதனால் குடும்பத்தில் குழப்பம் தீர்ந்துள்ளதுடன் குழந்தை பாக்கியம் உருவாகியுள்ளதாகப் பலர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் ஊரடங்கில் தந்தை ஆகும் வாய்ப்பைப் பெற்றுள்ள மதுப்பிரியர்களின்  குழந்தைகள்  அடுத்த வருடம் பிப்ரவரியில்  பிறந்தால் அந்தக் குழந்தைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரைத்தான் வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments