Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் நிதியுதவி

MK Stalin
, வெள்ளி, 12 மே 2023 (18:41 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் கிராமம், லாயம் விலக்கு பகுதியில் இன்று (12-5-2023) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்தநான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் திரு.சதிஸ், த/பெ.ராமசாமி, கைதக்குழி காலனி, திருவிதாங்கோடு (வயது-37), திரு.கண்ணன், த/பெ.ராஜன் சிதறால் அருமனை (வயது-23) திரு.அஜித், த/பெ.சதிஸ்குமார், அம்பங்காலை, திருவரம்பு (வயது-22) மற்றும் திரு.அபிஷேக், த/பெ.பீர்கன், குழிச்சாணி, அருமனை (வயது-22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் திருமதி.சஜிதா, நெய்யாற்றின்கரை. கேரளா மாநிலம் (வயது-37), திரு.நிதிஸ் த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-22), திரு.விக்னேஸ், த/பெ.ஜெனில்குமார், காளச்சந்தை, மார்த்தாண்டம் (வயது-22), திரு.நிசாந்த், த/பெ.இராமசாமி, த/பெ.சஜிஸ்பாபு, அம்பாங்காலை திருவரம்பு (வயது-18), திரு. சஜின் கள்ளிக்கோட்டை சிதறால் (வயது-18) மற்றும் சிறுமி அனாமிகா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.