Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர், கலெக்டரிடம், புகார் தெரிவித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது- பேரூராட்சி துணை தலைவர்!

J.Durai
புதன், 12 ஜூன் 2024 (13:54 IST)
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி துப்புரவு பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் சாலை அமைக்கும் பொழுது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது.
 
இதனால் துப்புரவு பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதியை சேர்ந்தவர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க சென்றனர்.
 
அப்பொழுது பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன் துப்புரவு பணியாளர்களை ஜாதியை சொல்லி திட்டியும் தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
 
இது குறித்து வன்கொடுமை தடுப்புச்  சட்டம் 2015 கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் அறிவழகன் புகார் தெரிவித்தார்.
 
வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில்
உரிய ஆதாரங்களுடன் அறிவழகன் புகார் தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து இன்று தேவதானப்பட்டி காவல்துறையினர்  துணைத்தலைவர் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments