ஆளண்டாப்பட்சி என்ற தமிழ் நாவல் ஆங்கிலத்தில் Fire Bird என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் இது உயரிய விருதை வென்றுள்ளது. இதற்கு எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
தமிழிலக்கிய உலகில் பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர் பெருமாள் முருகன். இவர் எழுதிய ஆளண்டாப்பட்சி என்ற தமிழ் நாவல் ஆங்கிலத்தில் Fire Bird என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த நிலையில் Fire Bird இலக்கியத்திற்கான பிற நாட்டு ஜேசிபி பரிசை வென்றுள்ளது.இந்த விருது ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டதாகும். இந்த நாவலை மொழிபெயர்த்தவர் ஜனனி கண்னன் ஆவார். பெங்குயயின் பதிப்பகத்தின் படைப்பு இதுவாகும்.
இந்த நிலையில் உயரிய விருதை வென்றுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மண்ணோடு இயைந்த மொழிவழக்கைக் கொண்டு எழுதும் பெருமாள்முருகன் அவர்களது ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ஃபையர் பேர்ட், இலக்கத்திற்கான ஜேசிபி விருது எனும் உயரிய விருதை வென்றிருப்பது அறிந்து மகிழ்கிறேன்.
பெருமாள்முருகன் அவர்களுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணன் அவர்களுக்கும் பாராட்டுகள்! என்று தெரிவித்துள்ளார்.