இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டுதோறும் இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்த ஆளுமைகளுக்கு தாதா சாகேப் பால்கே விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “இந்திய சினிமாவில் முக்கிய பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஜினிக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அடுத்ததாக தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், " தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.