Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சித்ரா பவுர்ணமி: வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை தீவிரம்

சித்ரா பவுர்ணமி: வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை தீவிரம்

J.Durai

கோயம்புத்தூர் , புதன், 24 ஏப்ரல் 2024 (15:03 IST)
கோவை தொண்டாமுத்தூர் வெள்ளியங்கிரி மலையில்,சித்ரா பவுர்ணமி தினமான இன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளனர்.
 
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்தாண்டு, கடந்த, பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
 
ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி, ஈசனை வழிபடுவது வழக்கம். இந்தாண்டும், நேற்று இரவு முதலே பக்தர்கள், மலை ஏற வந்தனர்.
 
சித்ரா பவுர்ணமியையொட்டி, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை, கிரி மலையில் உள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.
 
சித்ரா பவுர்ணமியையொட்டி, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து சுவாமியை தரிசித்து செல்லுவர்கள். ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 
 
வனத்துறை சோதனைச் சாவடி அருகே பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பார்க்கிங் பகுதியில் இருந்து கோவில் அடிவாரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டுகிறது. 
 
இந்நிலையில் கோவை வனக்கோட்டம் போலாம்பட்டி வனசரகம் பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை ட்ரோன் மூலம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீ போன்ற நிகழ்வு ஏற்படாத வண்ணம் வனத்துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்!