Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் 2 படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன்: ஐடி ரெய்டில் பகீர்!!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (12:37 IST)
லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 2.0, தர்பார் ஆகிய திரைப்படங்களுக்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்துள்ளார் என தகவ்ல் வெளியாகியுள்ளது.
 
பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் வீடுகளில் ஒரே நேரத்தில் சுமார் 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதோடு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் ரெட்டு நடைபெற்றது.
 
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அன்புச்செழியன் சென்னை வீட்டில் இருந்து 50 கோடியும், மதுரை வீட்டில் இருந்து 15 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும், கணக்கில் மறைத்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. பிகில் பட வசூல் மட்டுமின்றி, ஏராளமான திரைப்படங்களில் செய்துள்ள முதலீடு, வசூல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
ஆம், லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 2.0, தர்பார் ஆகிய திரைப்படங்களுக்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்துள்ளார். சுமார் 100 கோடி ரூபாயை லைக்கா நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments