Publish Date: Wed, 01 Sep 2021 (21:37 IST)
Updated Date: Wed, 01 Sep 2021 (21:39 IST)
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மண்ணெண்ணெய் உப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமெனவும், ஒருவேளை மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.