Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
, திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:43 IST)
அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

 
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கு கொண்டுள்ள நிலையில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது நடந்து முடிந்த கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை கடும் போராட்டத்திற்கு பிறகு 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்திருப்பது பெறும் மகிழ்ச்சி தருகிறது என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடியை பாத்தியா? ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்த ஆசாமிகள்! – குத்திக் கொன்ற கும்பல்!