கோவை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி வீட்டினருகே மர்மான முறையில் இறந்துகிடந்த நிலையில் குற்றவாளியை பிடிக்க போலீஸார் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தியதில் சந்தோஷ்குமார் என்ற அயோக்கியன் சிக்கினான். இந்த கேடுகெட்டவன் தான் அந்த பிஞ்சுக்குழந்தையை நாசமாக்கி கொலை செய்து செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டு பெரும் துயரம் அடைந்தேன். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் சார்பாக 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ளார்.