இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், பிப்ரவரி மாதம் சட்டசப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில் சில முக்கிய ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் காரணமாக மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது.
இந்த நிலையில் மிழ்நாடு அரசும் வரும் பிப்ரவரி மாதம் தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட்டில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் திரும்பி பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.