தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட நிலையில் பிரதமரை பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று அழைத்த நிலையில் மத்திய அமைச்சரை ஒன்றிய அமைச்சர் என்று அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியின் ஒன்றிய பிரதமர் என்று அழைத்து வந்தனர். ஆனால் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரை முதல்வர் வரவேற்று பேசியபோது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை ஒன்றிய அமைச்சர் என்று அவர் அழைத்தார்.
ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கோ பேக் மோடி என்று ஹேஷ்டேக்கை திமுகவினர் பெரிய அளவில் டிரெண்ட் ஆக்குவார்கள். ஆனால் இந்த முறை பெரிய அளவில் கோ பேக் மோடி பயன்படுத்தவில்லை. ஆனால் அதே நேரத்தில் பாஜகவினர் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பதும் இப்போதும் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது