தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கல்லணையை ஆய்வு செய்ய உள்ளார். கல்லணையில் தற்போது நவீனப்படுத்தும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து கல்லணை செல்கிறார் அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தவுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்
கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக கால்வாய்களை தூர்வாரும் பணிகளை அவர் துரிதப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை மேட்டூர் சென்று அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
அதன் பிறகு அவர் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் அரசு பணிக்காக செல்வதால் கட்சி தொண்டர்கள் யாரும் தன்னை சந்திக்க வேண்டாம் என ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது