Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Siva
புதன், 20 மார்ச் 2024 (13:47 IST)
வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.
 
இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறினார். அதில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் பதில் சொல்லியாக வேண்டும் என  எச்சரிக்கை விடுத்தார்.
 
எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில்  சொல்ல வேண்டியிருக்கும் என்றும், எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க  வேண்டும் என்றும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம் என்றும், குறிப்பாக தோழமை கட்சிகளை இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 
திமுக தலைவரின் இந்த எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் பொறுப்புடன் பணிபுரிவார்கள் என்றும் தங்கள் மாவட்டத்தில் வாக்குகள் குறைந்தால் தங்கள் பதவிக்கே வேட்டு என்ற நிலை ஏற்படலாம் என்ற அச்சத்துடன் பணிபுரிவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தால் 40க்கு 40 நிச்சயம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments