ஊரடங்கு உத்தரவால் கோயம்புத்தூரில் சிக்கி கொண்ட நபர் தற்கொலை செய்து கொள்ள தோன்றுவதாக அமித்ஷாவிடம் உதவி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயம்புத்தூரில் பணி புரிந்து வந்திருக்கிறார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் எல்லைகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத இளைஞர் தனது அறையிலேயே அடைந்து கிடந்திருக்கிறார். தனியாக இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார் அந்த இளைஞர்.
இதுகுறித்து அறிந்த கோயம்புத்தூர் காவல் ஆணையர் அந்த இளைஞருக்கு சாலைகளில் தடையை மீறி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கு பணியை அளித்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு போவதையே விரும்பியதால் பிறகு இருசக்கர வாகனம் மூலமாக அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல போலீஸார் உதவியதாக கூறப்படுகிறது.