Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டர் ரோஹினி மீண்டும் இடமாற்றம் – எந்த துறை தெரியுமா ?

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (07:49 IST)
சமூக வலைதளவாசிகளுக்கு மிகவும் தெரிந்த கலெக்டரான ரோஹினி மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலெக்டர் ரோஹினி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் ஆனார். அவர் செல்லும் நிகழ்ச்சிகள், மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் என அனைத்தில் இருந்தும் அவர் தீவிரமாக வேலை செய்வது போல புகைப்படங்கள் வெளியாகும். இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகி ரோஹினி ஆர்மி என்ற இணையப்பக்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் 2 ஆண்டுகளாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் 4 மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு இசை கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் அந்த பதவியை ஏற்ற நான்கே மாதங்களில் மீண்டும் இப்போது அவரை  மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments