Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

லயோலா கல்லூரியில் நடைபெற்ற புதிய பட்டயப் படிப்பு துவக்க விழா!

லயோலா கல்லூரியில் நடைபெற்ற புதிய பட்டயப் படிப்பு துவக்க விழா!

J.Durai

, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (09:15 IST)
சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து,  விஸ்காம் பிரிவியூ தியேட்டரில் "டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்" என்ற பிரீமியம் படிப்பை தொடங்குவதைப் அறிவித்தது.
 
இந்த தனித்துவமான பாடத்திட்டம் கலர் கார்பென்டர் எனும் நிறுவனத்தின் இயக்குனர்கள் லயோலா விஸ்காம் முன்னாள் மாணவர்களான திருமதி.மாதவி இளங்கோவன் மற்றும் ஜான் விஜய் ஜெபராஜ் ஆகிய இருவரால் வழி நடத்தப்படவிருக்கிறது. படைப்புத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இவர்கள் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், பிரான்ஸ், பாரிஸில் உள்ள டான் பாஸ்கோ இன்டர்நேஷனல் மீடியா அகாடமியுடன் இணைந்து, பாரம்பரியம் மிக்க விஸ்காம் துறைக்காக இந்த பாடத்திட்டத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
 
தொலைநோக்குப் பார்வை கொண்ட விஸ்காம் துறை, இந்த பாடத்திட்டத்தை சென்னையில் எட்டு மாத தீவிர பயிற்சித் திட்டமாக தொடங்கி, பாரிஸில் இறுதி திட்டப்பணியுடன் நிறைவு செய்ய, முடிவு செய்யப் பட்டுள்ளது. திரைப்பட ஆக்கத்தின் மூன்று கட்டமான முன் தயாரிப்பு, ஸ்கிரிப்டிங் மற்றும் பிந்தைய தயாரிப்பிலும் Al பயன்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள். இந்த பாடநெறி ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை அத்தியாவசிய திறன்களுடன் பயிற்சி அளிப்பதையும், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு செயல்முறைகளில் மாணவர்கள் திரைப்படத் தயாரிப்பில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதையும், AI தொழில்நுட்பங்களை தடையின்றி ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய மற்றும் சர்வதேச திரைப்படத் தயாரிப்பைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் சர்வதேச நிதி மேலாண்மை பற்றிய புரிதல்களை மாணவர்களுக்கு வழங்கும். இந்த பாடநெறியை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பிரான்சில் உள்ள டான் பாஸ்கோ சர்வதேச ஊடக அகாடமியில் மேற்படிப்பைத் தொடர எராளமான வாய்ப்புகள் உள்ளன.
 
சிறப்பு விருந்தினர்களாக லயோலா கல்வி நிறுவனங்களின் ரெக்டர் அருள்முனைவர் ஜெ.அந்தோணி ராபின்சன், பிரபல திரைப்பட நடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான  நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் பொதுமக்கள் மனு..!