வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள வைகோவின் மதிமுக மற்றும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும் தங்களது கட்சி சின்னத்தில் தான் போட்டு விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த இரு கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது அந்த சின்னத்தில் போட்டியிட முடியாது என போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக உள்பட அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பொதுவான ஒரு சின்னத்தில் போட்டியிட தயார் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் கூறியிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மனதில் ஆழப் பதிந்த உதயசூரியன் சின்னத்தை விட்டுவிட்டு பொதுவான ஒரு சின்னத்தில் போட்டியிட திமுக சம்மதிக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது
சின்னம் விஷயம் காரணமாக திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது