Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த மாணவி ஸ்ரீமதி தரப்பில் அறிக்கை வெளியீடு!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த 1 மற்றும் 2 வது பிரேத பரிசோதனை முடிவுகளை ஒப்பிட்டு ஸ்ரீமதி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கள்ளகுறிச்சி மாவட்டம் கனியாமூர்  தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவியின் மரணம் தொடர்பாக  அவரது 2 தோழிகள் ரகசிய வாக்குமூலம் கொடுத்த  நிலையில், அவரது தாய் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியிருந்தார்.

எனவே, தனியார் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இறந்த மாணவி ஸ்ரீமதி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், இறந்த மாணவி வலது  மார்பகத்தில் 3காயங்கள் இருந்ததாகவும், வலது பக்கம் விலா எலும்பு அனைத்தும் முறிந்து உள்ளதாகவும், மேலிருந்து கீழே விழுவதால் விலா எழும்பு முறிய வாய்ப்பில்லை. கல்லீரல் சிதைவு ஏற்பட சாத்தியமில்லை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மாணவி ஸ்ரீமதியின் வக்கீல் காசி விஸ்வ நாதன், கடந்த மாதம் 14 ஆம் தேதி பிரேத பரிசோதனைக்கும், 19 ஆம் தேதி அன்று நடந்த  பிரேத பரிசோதனை முடிவுகளில் சொல்லாத ஒரு சில தடயங்களை 2 வது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments