Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து-காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

J.Durai
வெள்ளி, 28 ஜூன் 2024 (10:43 IST)
2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறை கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற காரணங்களுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் , கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மற்றும் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி இணைந்து கோவை   சுந்தராபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை  தலைவர் முகமது ஆரீப்   தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி,வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் சுமார்  500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நீட் தேர்வில் முறைகேடுகள் செய்து மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 
 
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில சிறுபான்மை துறை தலைவர் முகம்மது ஆரீப்....
 
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதால்,நாடு முழுவதும், உள்ள  பல்வேறு மாணவர்களின் கனவுகள் வீணாகி உள்ளதாகவும், பல்வேறு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி கூறியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
எனவே நீட் தேர்வு முறை முழுமையாக  ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments