Publish Date: Thu, 28 Oct 2021 (13:25 IST)
Updated Date: Thu, 28 Oct 2021 (13:55 IST)
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த கடந்த வாரம் மெகா தடுப்பூசி மையம் சனிக்கிழமை நடந்தது.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்க மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இருப்பினும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,27,891 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 453 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நிலையில் 1,25,581 பேர் குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.