பாரிஸ் கார்னர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்புமுறைகள் மற்றும் நடமாடும் கோவிட் பரிசோதனைகளை ஆய்வு செய்தார் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேசினார், 100 பேருக்கு பரிசோதித்தால் 2 பேருக்கு தொற்று வருகிறது. 10 நாட்களுக்கு முன் இது 1 ஆக இருந்தது. பொது இடங்களில் Random Testing அதிகப்படுத்தியுள்ளோம். மடிப்பாக்கம், தி நகர், மயிலாப்பூரில் கிளஸ்டர்ஸ் உருவாகி வருகிறது. 364 பேருக்கு ஒரே நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தான் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் tracing நடைபெற்று வருகிறது.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். விருகம்பாக்கம் தசரதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கரும்பலகையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எழுதியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த செயலர்,
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி இணைநோயுள்ள 45 வயது முதல் 60 வயதுயோருக்கும், 60 வயது முதல் அனைவருக்கும், இது தவிர முன்கப் பணியாளர்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வக் கோளாறாக இதுபோன்று ஒரு சிலர் செய்துள்ளனர்.
40 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் இல்லாதவர்கள், 40 க்கும் கீழ் குறைந்த வயதுடையவர்கள் என பல தரப்பினருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம் என்றார்.