Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மறைக்கப்படும் மரணங்கள்: உண்மை பின்னணி என்ன??

மறைக்கப்படும் மரணங்கள்: உண்மை பின்னணி என்ன??
, வியாழன், 11 ஜூன் 2020 (11:16 IST)
236 நபர்களின் மரணம் விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 1,927 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000ஐ நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,927 பேர்களில் 1,390 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,973 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகருக்குட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் குறித்து மின்னஞ்சல் வாயிலாக மாநகராட்சிக்கு தெரிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 
 
இந்நிலையில், 236 நபர்களின் மரணம் விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த கூடுதல் இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1,000, 2,000, 3,000... இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ??