இந்தியாவில் கொரொனா தொற்றுக்கு இதுவரை 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 4 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களில் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்குள் இருக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் பொது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய காணொலி வாயிலான ஆலோசனை நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இன்று மாலை மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழகத்தில் இன்று 6352 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 4,15,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 7137 பேர் உயிரிழந்துள்ளனர்/
இன்று 6045 பேர் குணமடைந்துள்லபர். தமிழகத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,55, 727 ஆக அதிகரித்துள்ளது