தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பரிசோதனைகளையும் குறைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கின. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதுடன், அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் அதிகரிப்பட்டன. மேலும் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்புகள் குறைந்து வருவதால் கொரோனா பரிசோதனையையும் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.