Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசி; பற்றாக்குறையை சமாளிக்க தீவிரம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:17 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் முதல்கட்ட டோஸ் செலுத்த கூட தடுப்பூசிகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த வார இறுதியில் தடுப்பூசிகள் தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புனேவிலிருந்து விமானம் மூலமாக 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் இன்று வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பாதிப்பு நிலவரம் சார்ந்து பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: ரூ.15 கோடி ஒதுக்கீடு..!

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி வல்லவ ப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை!

சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்.. சென்னையில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்..!

28 மாணவிகள் கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்! - ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேமராமேன்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments