Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் எகிறியது கொரோனா தொற்று..

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (00:07 IST)
கரூரில் எகிறியது கொரோனா தொற்று 74 நபர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று .
 
தமிழக அளவில் மைய மாவட்டம் என்ற பெயரோடு, வணிகம், ஆன்மீகம், தொன்மை ஆகியவைகளிலும் கரூர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது கொரோனா 3 ம் அலை பரவலில் அதிக அளவு கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்கும் மாவட்டமும் கரூர் மாவட்டம் என்றால் அதற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்களின் துரித நடவடிக்கையே ? இருப்பினும், கரூர் மாநகராட்சியில் கடந்த சில தினங்களாகவே வணிக நிறுவனங்கள் என்று பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு குளிர்சாதனங்கள் பொறுத்தப்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்நிலையில், வெறும் கண் துடைப்பிற்காக அவ்வப்போது ஏதோ ஒரு சில நிறுவன்ங்களுக்கு மட்டும் ரூ 5 ஆயிரம் என்று விழாக்கோலம் முடிந்த நிலையில் அபராதம் கரூர் மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டதே தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல், அனைத்து நிறுவனங்களும் அதிக அளவில் கூட்டத்தினை கட்டுக்கு அடங்காமல் கூட்டியது. ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் என்று பலவற்றிலும் கடந்த 10 ம் தேதி முதல் 13 ம் தேதி நள்ளிரவு வரை கூட்டம் கட்டுக்கு அடங்காமல் கூடியது. இந்நிலையில், கொரோனா தொற்று உருவாவதில், கரூர் மாநகராட்சியின் மெத்தனத்தினால் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இந்நிலையில் 14 ம் தேதியான இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஐ தொட்டது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்கள் 246 நபர்கள் உள்ள நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 17 நபர்கள் மட்டுமே, இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை முதன் முதலில் ஒரு நபர் இறந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுக்க, முழுக்க கரூர் மாநகராட்சியின் அஜாக்கிரதையினால் தான் இந்த கொரோனா தொற்று தற்போது உருவெடுத்து அதிகளவில் அதிகரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 13 ம் தேதி 47 நபர்கள் மட்டுமே கொரோனா தொற்று இருந்த நிலையில், 14 ம் தேதி மட்டும் 74 உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஒமிக்கிரான் தொற்று நாமக்கல் மாவட்ட்த்தில் இருவருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், மேலும், இருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று 198 ஐ தொட்ட நிலையில், அங்கு பல்வேறு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை அதிகரித்துள்ளது. நேற்று 13 ம் தேதி 112 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 673 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 198 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 நபர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments