Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மது விற்பதே கொள்ளைதான்… அதற்கு மேலும் கொள்ளையா? அரசை சாடிய நீதிமன்றம்!

மது விற்பதே கொள்ளைதான்… அதற்கு மேலும் கொள்ளையா? அரசை சாடிய நீதிமன்றம்!
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:32 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பது தொடர்பாக நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் மதுபாட்டில்கள் வாங்குவதற்கான ரசீதுகளும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பெரும் தொகை நாளுக்கு நாள் டாஸ்மாக் நிர்வாகத்தால் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தஞ்சாவூரைச்  சேர்ந்த ராஜேஷ் பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிபதிகள் ‘மது விற்பனை என்பதே கொள்ளைக்கு சமம். பெரும்பாலானவர்கள் மக்களிடம் கொள்ளை அடித்து அந்த பணத்தில்தான் குடிக்கிறார்கள். இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கொள்ளையடித்தவர்களிடமே கொள்ளையடிப்பது போன்றது. இதனால் நீதிபதிகளே நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்யும் நிலை ஏற்படலாம். இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள் மேல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்’ எனக் கூறி எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை 5 வருஷமா காதலிக்கிறேன்! பெட்டியை திருமணம் செய்த பெண்! – ரஷ்யாவில் விநோதம்!