அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக சின்னம், கொடி மற்றும் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் தற்போது தீர்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் இடைக்கால தடை விதித்தது தவறு என்றும் பதவி நீக்கம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக இடைக்கால உத்தரவுகள் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர இறுதி உத்தரவு அல்ல என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது