Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காவல் நிலையத்தில் மரணம்: வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

காவல் நிலையத்தில் மரணம்: வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

Mahenran

, திங்கள், 8 ஜனவரி 2024 (17:04 IST)
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் மரணமடைந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பிரேத பரிசோதனை செய்யும்போது முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஈரோடு எஸ்.பி., பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை போலீசார், ரகசிய இடத்திற்கு பாலகிருஷ்ணன் என்பவரை அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால்  பாலகிருஷ்ணன் மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
மேலும் பாலகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனையை வேறு அரசு மருத்துவமனையில் நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்யவும், நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சகோதரர் மாரியப்பன் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
 
காவல்துறையின் செயலை மறைக்கும் நோக்கில் காவல்துறை, மருத்துவர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று அவர் தனது மனுவில் புகார் அளித்திருந்த நிலையில்  பாலகிருஷ்ணன் உடலை வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 
Edited by Mahenran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலைநிறுத்தம் எதிரொலி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? அமைச்சர் சிவசங்கர் தகவல்