முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் வாரன்ட் இல்லாமல் காவல்துறையினர் சோதனை செய்ததாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையில் அவரது வழக்கறிஞர் வீட்டில் வாரன்ட் இல்லாமல் போலீசார் சோதனை செய்ததாக தெரிகிறது இதனை அடுத்து அவரது வழக்கறிஞர் மாரிஸ் குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன்ஜாமீன் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மனுவின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்படி ராஜேந்திரபாலாஜி வழக்கை சந்திப்பார் என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.