Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டார் பைக், கார்களில் கறுப்பு ஸ்டிக்கர் – உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (11:39 IST)
மோட்டார் வாகனங்களின்  ஹெட்லைட்டுகளினல் இரண்டு வாரத்துக்குள் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் பெரும்பாலானவை நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. அதிலும் இரவு நேரங்களிலேயே அதிகளவில் நடக்கின்றன. இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள அதிக ஒளியை உமிழும் லைட்டுகளும் ஒரு முக்கியக்காரணமாக இருந்து வருகின்றன. இந்த லைட்டுகளின் ஒளிக் கட்டுப்பாடு குறித்து பல விதிமுறைகள் இருந்தாலும் அதை யாருமேக் கண்டுக் கொள்வதில்லை.

இதையடுத்து விபத்துகளைக் குறைக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநலன் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில் ‘மிழ்நாட்டில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகள சுமார் 5,00000 கிலோமீட்டர் நீளத்தில் உள்ளன. நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி மற்றும் இன்னபிற கனரக வாகனங்கள், அதிகளவில் ஒளியை வெளியிடும் ஹெட் லைட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இதனால் எதிரில் வரும் வாகனங்களை இயக்குவோருக்கு கண் கூசுவதால் விபத்து ஏற்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடக்கக் கூடிய விபத்துகள் பெரும்பாலும் ஹெட்லைட்டுகளால் ஏற்படுகின்றன. முகப்பு விளக்குகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், எதிர்த் திசை ஒட்டுநர்களுக்குச் சிரமம் ஏற்படாது’ என அவரது மனுவில் தெரிவித்திருந்தார்.

அவரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள்  இரண்டு வாரத்தில் மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments