திருச்சி டி.ஐ.ஜி. எம். அருண்குமார் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சீமான் தரப்பு வீடியோ ஆதாரங்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், அரை மணி நேரத்தில் அந்த வீடியோக்களை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி டி.ஐ.ஜி. எம். அருண்குமார் தன்னையும் தனது குடும்பத்தினரை அவதூறாக விமர்சனம் செய்தது தொடர்பாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று, சீமான் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர், "அவர் செவ்வாய்க்கிழமை ஆஜராவார். அதுவரை அவகாசம் வழங்க வேண்டும்," என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், இன்று சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு, டி.ஐ.ஜி. அருண்குமார் சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று சீமான் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது. உடனே, நீதிபதி அந்த ஆதாரங்களை அரை மணி நேரத்தில் சீமான் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.