ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஜூலை மாதங்களில் குற்றால சீசன் களை கட்டி வரும் நிலையில் இந்த ஆண்டும் குற்றால சீசன் தற்போது களை கட்டி வருவதாகவும் இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கன மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன்
மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, தேன் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளித்து வருகின்றனர். மேலும் மேகம் சூழ்ந்து சாரல் மழையும் பெய்து வருவதால் சீசனையும் பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின தெரிவித்துள்ளனர்.