நேற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். இதற்கு தினகரன் அணியில் உள்ள சி.ஆர்.சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டியளித்த சி.ஆர்.சரஸ்வதி, இந்த பட்ஜெட்டால், தங்கம், வெள்ளி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அப்படியிருக்கும் போது முதல்வர் பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிடுகிறார்.
ஜெயலலிதா இருக்கும் போது பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிடுவாரா? பட்ஜெட்டில் உள்ள குறைகளை சொல்லுவார். ஆனால் ஜெயலலிதா வழியில் ஆட்சி எனக்கூறும் நீங்கள் ஏன் வரவேற்றீர்கள். இதிலிருந்து இது பாஜகவை சார்ந்த அரசு என்பது தெரிகிறது. இது அதிமுக அரசு அல்ல, இது பாஜக அரசு என்றுதான் சொல்ல வேண்டும் என சரஸ்வதி கடுமையாக சாடினார்.