Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்- அமைச்சர் சேகர் பாபு

Sinoj
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (13:59 IST)
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், திமுகவில் கம்யூனிஸ்ட், மதிமுக, ஆகிய கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், காங்கிரஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று முடிந்தது.

இந்த நிலையில், இன்று சென்னையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அசுரர்களை அழிக்க முருகன் புறப்பட்ட போது அசுரனை அழிக்கும் பணியை வீரபாகு என்கிற தளபதியிடம் ஒப்படைத்தார். அதேபோல், பாஜக என்ற அசுர கூட்டத்தையும், எடப்பாடி கூட்டத்தையும் அழிக்க வந்திருக்கும் முதலமைச்சரின் தளபதி வீரபாகுவாக உதயநிதி இருக்கிறார்.

இந்த தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எதிரிகளே இல்லாத  நிலையை உருவாக்க வேண்டும் ''என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு சிறு சிறு குட்டிகள் உருவாகும், அந்த உதயத்திற்கு இந்த தேர்தலில் உதய நிதி ஸ்டாலின் ஆணியடிப்பதுபோல் நமது வெற்றியை திமுக தலைவருக்கு காணிக்கை ஆக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments