Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேப்பாக்கத்தை அடுத்து சென்னையில் இன்னொரு கிரிக்கெட் மைதானம்: மாநகராட்சி அறிவிப்பு..!

chepauk
, திங்கள், 6 நவம்பர் 2023 (09:40 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கோபாலபுரம் திடலில் கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 1 கோடி ரூ.9 லட்சம் மாநகராட்சி சார்பில் செலவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கான நிதியை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த 2 பணிகள் முடிவடையும் போது, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி கோவிலில் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து.! அதிரடி அறிவிப்பு..!