Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டிசம்பர் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்: அச்சத்தில் சென்னை வாசிகள்!

மீண்டும் டிசம்பர் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்: அச்சத்தில் சென்னை வாசிகள்!

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (11:46 IST)
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 
 
இதனால் சென்னை மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும்.
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி வரும் 2-ஆம் தேதி காலை சென்னை வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையை கூறியுள்ளது.
 
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு முதல் லேசான மழை ஆரம்பமாகும். நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
குறிப்பாக சென்னை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments