சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட விரிவான தகவல்கள் பின்வருமாறு, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 28 ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கை நோக்கி நகர்கிறது. தற்போது தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது. எனவே, இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயல் வர வாய்ப்பிருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் நிலைபாடு குறித்த உறுதியான தகவல் 25 ஆம் தேதிக்கு பின்னர்தான் கணிப்படும். அப்படி, தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.