Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலை நல்ல திட்டம்தான், எதிர்ப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (08:55 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் நோக்கம் தெரியாமல் எதிர்க்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
 
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமாக சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி ராஜா, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலையின் நோக்கம் தெரியாமல் இந்த திட்டத்தை எதிர்க்க கூடாது. இந்த திட்டத்தால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக கிராமங்கள் பெரு நகரங்களுடன் இணைக்கப்படும். தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்.
 
இந்த சாலை குறித்த நான் பலரிடம் கருத்து கேட்டதில் அனைவரும் பாராட்டினர். ஒருசிலர் மட்டும் இந்த சாலையை தரை மார்க்கமாக இல்லாமல் உயர்மட்டத்தில் அமைக்கலாம் என கருத்து தெரிவித்தனர். 
 
எனவே 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்' என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி. டி.ராஜா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments