Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு: மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல்!

madras eye
, வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:50 IST)
மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மெட்ராஸ் ஐ என்ற நோய் பரவி வருவதாகவும் இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 210க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் மெட்ராஸ் ஐ குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்தா? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!