மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது.
இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
முக்கியமாக, ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்” எனக் குறிப்பிட்டிருந்தார். மதத்தை சார்ந்து அவர் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், சின்னத்திரை தொகுப்பாளினி டிடி தனது டிவிட்டர் பக்கத்தில் “ டெங்குவால் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. இப்போது மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமாருக்மணி ஒரு கிறிஸ்துவரா என்பதை அறியும் முயற்சியில் ஒரு தமிழக அரசியல் தலைவர் ஈடுபட்டுள்ளார். எனக்கு ஒன்னுமே புரியல” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் மறைமுகமாக ஹெச்.ராஜாவைத்தான் குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.