நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.
பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி ன்சுமார் 288 பேர் பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மீட்புப்பணியினர் தொடர்ந்து துரிதமாக செய்யப்பட்டு வருகிறார். சமைப்பதில் இடத்தில் யோருந்து வெளியாகும் புகைப்படங்கள் நெஞ்சை பதபததைக்க வைத்துள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்து மீட்புப் பணியில் தமிழ்நாட்டுக் குழு, விபத்துக்குள்ளானோர் குறித்து தகவல்களை அறிய :