ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. தற்போது உயர் நிதிமன்ரமும் தேதி குறிப்பிடாமல் குக்கர் வழக்கை தள்ளிவைத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை கேட்டு தேர்தல் கமிஷனை அனுகினார் தினகரன். ஆனால், குக்கர் சின்னம்தான் அவருக்கு கிடைத்தது. அதிமுகவின் மற்றொரு அணியாகவே செயல்படும் தினகரன், மக்கள் மத்தியில் பிரபலமான குக்கர் சின்னத்தை உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும் என நினைக்கிறார்.
எனவே, வரும் உள்ளாட்சி மற்றும் மற்ற தேர்தலில் போட்டியிடவும், தங்கள் அணிக்கு எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என்ற மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரையும் குக்கர் சின்னத்தையும் ஒதுக்குமாறும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
ஆனால், டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.