ஆர்.கே.நகர் தொகுதியின் எம்எம்ஏ-வான தினகரன் ஆளும் மாநில அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு...
2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாஜக-வுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்போது பிரச்சாரங்களில் மோடியா, இந்த லேடியா? என கேள்வி கேட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
இதனால் ஜெயலலிதாவின் மீது பாஜக கடும் கோபத்தி இருந்தது. ஆனால், அந்த கோபத்தை காட்ட முடியவில்லை. தற்போது அதை ஜெயலலிதாவுக்கு ஆதர்வாக இருந்த எங்கள் குடும்பம் மீது காட்டுகின்றனர்.
ஜெயலலிதா இறந்த அன்று, சசிகலாவோ அல்ல நானோ முதலமைச்சராக பதவியேற்றிருந்தால் அதை யாரால் தடுத்திருக்க முடியும். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் பாஜக-வுக்கு ஏஜெண்டுகளாக உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் தம்பிதுரை அனைவரும் வந்து சசிகலாவை முதலமைச்சர் ஆக பதவி ஏற்க வேண்டியது எல்லாம் மறந்துவிட்டது போல என பேசியுள்ளார்.