Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி!!: விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய தருணம்!

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி!!: விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய தருணம்!
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (20:35 IST)
சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி மறுநாளே இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற சிறுமிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பதை அறிந்த டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சலின் பாதிப்பால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வருடம் டெங்குவால் பலியான முதல் குழந்தை மகாலட்சுமிதான் என்று கூறப்படுகிறது. பருவமழை தொடங்கும் சூழலில் டெங்கு போன்ற கொடிய வியாதிகளும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடுகின்றன. மக்கள் தங்கள் சுற்றுவட்ட பகுதிகளில் மழை நீர், சாக்கடை போன்றவை தேங்காமல் கவனித்து கொள்வதுடன், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் வகையில் உணவுகளையும் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

தொடரப்போகும் பருவ மழைகளால் கொசுக்கள் நிறைய உற்பத்தி ஆக கூடிய அபாயம் உள்ளது. அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் வாழும் பகுதிகளில் தீவிர துப்புறவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல பகுதிகளிலும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிடலாமா?