காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது அது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்பது தெரிந்ததே. இந்நிலையில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் தெற்கு நோக்கி நகர்ந்து சென்று வலுவிழக்க தொடங்கும். பின்னர் அது மாமல்லபுரம் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆம், சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவே மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.